கனவு ஆசிரியர் 2023 | Kanavu Asiriyar, பாடத்திட்டம் (Syllabus), கனவு ஆசிரியர் விருது 2023
![]() |
கனவு ஆசிரியர் 2023, Kanavu Asiriyar Syllabus, Exam Pattern |
கனவு ஆசிரியர் 2023 பாடத்திட்டம் கற்பித்தலியல்
கற்பித்தல் முறைகள்
குழந்தைகளை ஈடுபடுத்தும்வகையில் பல்வேறு கற்பித்தல் அணுகுமுறைகளைச் செயல்படுத்துதல்.
திறம்பட வினா தொடுத்தல்
பாடக்கருத்துக்களை மாணவர்கள் புரிந்து கொண்டனர் என்பதை அறிய சிந்தனையைத் தூண்டும் விதமாக வினாக்களை கேட்டல், வீட்டுப்பாடம் அளித்தல்
பாடக்கற்பித்தலுக்கு திட்டமிடுதல்
அனைத்து பகுதிகளிலிருந்தும் மாணவர்களின் சிந்தனையை தூண்டுமாறு வினாக்கள் கேட்டல்
மதிப்பீடுகள்
- மதிப்பீட்டின் நோக்கம்
- படம் மற்றும் மாணவர்களின் நிலைக்கு கேற்ப பல்வேறு மதிப்பீட்டு முறைகளை கையாளுதல்.
கற்றல்
கற்றல் கோட்பாடுகள்
பல்வேறு கற்றல் கோட்பாடுகளைக் கருத்தில் கொண்டு பாடத்தைக் கற்பித்தல்.
கற்போரின் பன்முகத்தன்மை
கற்போரின் பன்முகத்தன்மை, கற்கும் தன்மை இவற்றை மனத்தில் கொண்டு அனைத்துக் குழந்தைகளுக்கும் ஏற்றவாறு பாடங்களை வடிவமைத்தல், உரிய திறன்கள் பெறுவதை உறுதிசெய்தல்.
தகவல் தொடர்பு
திறம்படக் கேட்பது, பேசுவது, படிப்பது மற்றும் எழுதுவது போன்ற தகவல் தொடர்புத் திறன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித்தருதல்.
குறைதீர்த்தல்
குறைதீர்க்கற்பித்தலுக்கு உதவும்வகையில் மதிப்பீட்டைச் செய்தல், குழந்தைகளின் நிலையறிந்து அவர்களுக்கு உதவும்வகையிலான சரியான மதிப்பீட்டுக் கூறுகளை வடிவமைத்துச் செயல்படுத்துதல்.
குழுப்பணி மற்றும் தலைமைத்துவம்
இணைந்து கற்றல் அனைத்துநிலை பாடம் மற்றும் வகுப்புகளுக்கிடையேயான தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை அறிந்து செயல்படுத்துதல், குழுக்களில் திறம்படச் செயல்படுதல்.
பின்னுட்டம்
வளர்ச்சிக்கு வழிவகுக்கும்விதமான ஆக்கபூர்வமான பின்னுட்டங்களை வழங்குதல் மற்றும் பெறுதல்.
தலைமைத்துவம்
சூழல், பணி மற்றும் குழுவின் தன்மை ஆகியவற்றிற்கு ஏற்பப் பல்வேறு தலைமைத்துவ பண்புகளை பின்பற்றுதல். திறன் மிக்கக் குழுக்களை உருவாக்குதல் மற்றும் வளர்த்தல்.