பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் – 25.09.2023

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் – 25.09.2023

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் Today, School Morning Prayer Activities
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் Today Activities


திருக்குறள்

குறள் 40:

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.

மு.வரதராசன் விளக்கம்:

ஒருவர் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறம் ஆகும். செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழி ஆகும்.

பொன்மொழி :

பிறருக்கு துன்பம் ஏற்படாத வகையில் உங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.

பழமொழி :

Pride comes before fall.
அகம்பாவம் அழிவை தரும்.

பொது அறிவு :

தமிழ்நாட்டில் பெட்ரோலியம் கண்டறியப்பட்டுள்ள இடம் எது?

விடை : தஞ்சாவூர்(நரிமணம்)

முக்கியச் செய்திகள் : 25.09.2023-திங்கள்

மாநிலச்செய்தி:

கீழடியில் நடைபெற்ற 9ம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழிக்குள் 1.4 செ.மீ நீளம் கொண்ட அரிய வகையிலான 2 சூதுபவளங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரே நிறத்தில் மட்டுமே கண்டறியப்பட்ட சூதுபவளம், தற்போது அலை அலையாக வரி வடிவத்துடனான வேலைப்பாடுகளுடன் கிடைத்துள்ளது. 

உள்நாட்டுச் செய்தி :

சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். 11 மாநிலங்களை இணைக்கும் வகையில் புதிதாக 9 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

உலகச்செய்தி:

பாகிஸ்தானில் கிட்டதட்ட 40 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

விளையாட்டுச்செய்தி:

இந்தூரில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 399 ரன்களை குவித்தது. இந்திய அணி வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மான் கில் அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தினர். 

School Morning Prayer Activities in English Today

Important News : 25.09.2023 – Monday

State News:

2 rare corals of 1.4 cm length have been found in the 9th phase of the excavation in Geezadi. Corals, hitherto found only in single color, are now available with wavy line patterns.

National  News:

Prime Minister Modi inaugurated the Vande Bharat train service between Chennai through video. PM Modi flagged off 9 new Vande Bharat trains connecting 11 states

World News:

The World Bank has warned that nearly 40 percent of Pakistan's population lives below the poverty line

Sports News:

In the match held in Indore, the Indian team scored 399 runs for the loss of 5 wickets at the end of 50 overs. Indian team players Shreyas Iyer and Subman Gill scored centuries in succession.

Post a Comment (0)