கனவு ஆசிரியர்‌ 2023 விண்ணப்பித்தவர்களுக்கான சோதனை வழிமுறைகள் ( தேர்வு எழுதும் முன் செய்ய வேண்டியவை ) Kanavu Asiriyar 2023

 

கனவு ஆசிரியர்‌ 2023  விண்ணப்பித்தவர்களுக்கான சோதனை வழிமுறைகள் ( தேர்வு எழுதும் முன் செய்ய வேண்டியவை )  Kanavu Asiriyar 2023



கனவு ஆசிரியர்களுக்கு 2023-க்கு விண்ணப்பித்தவர்களுக்கான சோதனை வழிமுறைகள்:

(தேர்வு எழுதும் முன் செய்ய வேண்டியவை) :

இந்த வழிமுறைகளை கவனமாக படித்து பயன்பெறுங்கள் :

1) கணினி அல்லது மொபைல் ( System requirements )  கருவிகள் ( Device ) :

         டெஸ்க்டாப் / லேப்டாப் (  Desktop / Laptop ) சிறந்தது. இவை இரண்டும் இல்லையென்றால் ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்தலாம். இவை அல்லாமல் ஐ-ஃபோன் பன்படுத்த முடியாது.

2) இணைய வேகம் (  Internet speed ) :

            தொடர்ச்சியாக குறைந்தபட்சம் 2 Mbps  வேகம் அவசியம். ஏனெனில் வேகம் மெதுவாக இருந்தால் , நேரம் அதிகம் எடுக்கும். நீங்கள் தேர்வை குறித்த நேரத்திற்குள் முடிக்க முடியாது. எனவே, இணைய வேகம் 2 Mbps  அவசியம்.

3) ப்ரவுசர் (  Browsers ) :

        கூகுல் குரோம் / மைக்ரோசாஃப்ட் எட்ஜ் / மொஸில்லா பயர்பாக்ஸ்                                         (Google chrome / Microsoft edge / Mozila firefox) போன்ற ப்ரவுசர்களைப் ( Browsers )  பயன்படுத்தவும். 

4) வெப்கேம் மற்றும் மைக்ரோஃபோன் :

        சோதனை முழுவதும் நிகழ்வதற்கு வெப்கேம் மற்றும் மைக்ரோஃபோன் கண்டிப்பாக இயக்கத்தில் இருக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு :

கனவு ஆசிரியர் 2023 போட்டியில் பங்கேற்பவர்கள் தேர்வு எழுதும் 48 மணி நேரத்திற்கு முன் https://assess.cocubes.com/check-system  இந்த இணைப்பை பயன்படுத்தி கணினியை அல்லது மொபைலை சரிபார்த்துக் கொள்ளவும். 


Post a Comment (0)