பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 1 ஆகஸ்ட் 2023

 

பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 1 ஆகஸ்ட் 2023

திருக்குறள் :

குறள் 2:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

.வரதராசன் விளக்கம்:

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

 பொன்மொழி :

அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும்

ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.
 – சுவாமி விவேகானந்தர்

 

பழமொழி :

Humility often gains more than pride.

அடக்கம் ஆயிரம் பொன் தரும்.

 பொது அறிவு :

நீரை அருந்தாத நீர் வாழ் உயிரினம் எது ?

     விடை :   டால்பின்

தலையில் இதயத்தைக் கொண்டுள்ள உயிரினம் எது ?

    விடை :  இறால்

முக்கியச் செய்திகள் : 1.08.2023 – செவ்வாய்

மாநிலச்செய்தி:

சென்னையைச் சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி சுபிக்ஷா, 200க்கும் மேற்பட்ட நாடுகளின் தேசிய கீதங்களை, ஸ்ருதி மாறாமல், அந்தந்த மொழிகளிலேயே பாடி, உலக சாதனை படைத்து, அனைவரையும் பிரமிக்க வைத்து பாராட்டுகளை பெற்று வருகிறார்

உள்நாட்டுச்செய்தி:

நிலவை நோக்கி பயணித்து வரும் சந்திரயான்-3 விண்கலம், புவி வட்டத்தின் இறுதி சுற்றுப் பாதையை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு, இன்று நிலவின் வட்டப் பாதைக்குள் பயணிக்கத் தொடங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

உலகச்செய்தி:

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் 'ட்ரோன்' தாக்குதல் நடத்தியதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்கோ சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.

விளையாட்டுச்செய்தி:

ஆசிய விளையாட்டில் பங்கேற்க இந்திய ஆண்கள், பெண்கள் கால்பந்து அணிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது

Important News : 1.08.2023 – Tuesday

State News:

Subiksha, a 9th grade school student from Chennai, has set a world record by singing the national anthems of more than 200 countries in their respective languages without changing the sruthi

National  News:

Chandrayaan-3, which is on its way to the moon, has successfully completed its final orbit around the Earth and will begin its journey into the lunar orbit today, ISRO said.

World News:

Moscow International Airport closed as a precaution after Ukraine's 'drone' attack on Russian capital Moscow.

Sports News:

The central government has given permission to the Indian men's and women's football teams to participate in the Asian Games

Post a Comment (0)