பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 27 ஜூலை 2023
திருக்குறள் :
குறள் 517:
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
.வரதராசன் விளக்கம்:
இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத்தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.*****
பொன்மொழி :
கோழையும் முட்டாளுமே இது என் விதி என்பான். . . ஆற்றல் மிக்கவனோ என் விதியை நானே வகுப்பேன் என்று கூறுவான்.
– சுவாமி விவேகானந்தர்
*****
பழமொழி :
Do not look a gift cow in the mouth. தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே.
பொது அறிவு :
1) நம் தேசிய தர்மச்சக்கரத்தின் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு
எது ?
குதிரை
2) இந்தியாவில் பறக்கும் மிகப்பெரிய தேசியக்கொடியின் அளவு
எவ்வளவு ?
நீளம் 72 அடி
அகலம் 48 அடி
*****
முக்கியச் செய்திகள் : 27.07.2023 – வியாழக்கிழமை
மாநிலச்செய்தி:
கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் ஜூலை 31ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டுச்செய்தி:
‛‛விரைவுச்சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில், மூங்கில்களால் செய்யப்பட்ட, ‛பாகுபலி' வேலிகள் புதிய திட்டம்
செயல்படுத்தப்படும்,'' என, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர், நிதின் கட்கரி ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளார்.
உலகச்செய்தி:
கிரீஸ் நாட்டில் மூன்றாவது ஆண்டாக கடுமையான வெப்ப அலை
மக்களை வாட்டி வதைக்கிறது என அந்நாட்டின் பிரதமர் கிரியா கோஸ் கவலை தெரிவித்துள்ளார்.
விளையாட்டுச்செய்தி:
ஐ.டி.எஃப் டென்னிஸ்தொடரில் இந்தியாவின் கர்மான் கவுர்
தண்டி சாம்பியன் பட்டம் வென்றார்.
Important News : 27.07.2023 – Thursday
State News:
The Directorate of Government Examinations has informed that the
original score certificates will be issued from July 31 to the candidates who
appeared for the Plus 2 public examination held last March and April.
"A new scheme of ``Baahubali'' fences made of bamboo will
be implemented on expressways and highways," Union Road Transport and
Highways Minister Nitin Gadkari said in the Rajya Sabha. ...
Greece's prime minister, Kyriakos, has expressed concern that a
severe heat wave is suffocating people for the third year in a row.
Sports News:
India's Karman Kaur won the Thandi title in ITF Tennis
*****