திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் MPhil, Ph.D. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்… (www.msuniv.ac.in)
Thirunelveli Manonmaniam Sundaranar University திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இவ்வாண்டிற்கான எம்பில்(MPhil), பிஎச்டி(PHD) படிப்புக்கான தகுதி தேர்விற்கு விண்ணப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது. (www.msuniv.ac.in)
·
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளில் இளம் முனைவர் (எம்பில்) முனைவர் (பிஎச்டி) படிப்புக்கான தகுதித் தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அதன் பதிவாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “முதுகலை இறுதிபருவத்தில் பயிலும் மாணவர்களும் தகுதித்தேர்வில் கலந்து கொள்ளலாம். ஆனால், முனைவர் பட்டப் பதிவின்போது முதுநிலையில் தேர்ச்சி பெற்ற இறுதி மதிப்பெண் பட்டியலை தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும்.
இது சார்ந்த பாடப் பிரிவுகள், அடிப்படைத் தகுதிகள், கட்டண விவரங்கள், தகுதித்தேர்வு தேதி மற்றும் அனுமதி நெறிமுறைகள் ஆகியவை பல்கலைக்கழக இணையதளத்தில் (www.msuniv.ac.in) கொடுக்கப்பட்டுள்ளது. யுஜிசி நெட் (UGC NET), சிஎஸ்ஐஆர் நெட்(CSIR NET), கேட், சீட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்த தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தகுதித் தேர்வின் 2 அமர்வுகளுக்கு மட்டும் செல்லுபடியாகும். முழு நேர ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவித்தொகை பெறும் வாய்ப்புகள் உண்டு. இது பற்றிய விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தகுதித்தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ள விண்ணப்பம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். (www.msuniv.ac.in)
தகுதித் தேர்வுக்கான கட்டணத் தொகை ரூபாய்.இரண்டாயிரம் ஆகும். இணையதளம் மூலம் கடந்த 20ம் தேதி முதல் விண்ணப்பிக்க ஜூலை 31ம் தேதி கடைசி நாளாகும். தகுதித்தேர்வு ஆகஸ்டு 6ம் தேதி நடத்தப்படுகிறது. பலகலைக்கழக வளாகத்தில் தகுதித் தேர்வு நடத்தப்படும்” என பதிவாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.