பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 31 ஜூலை 2023

 

பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 31 ஜூலை 2023

திருக்குறள் :

குறள் 72:

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.


.வரதராசன் விளக்கம்
:

அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.

 பொன்மொழி :

 உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. – சுவாமி விவேகானந்தர்

 பழமொழி :

A good when lost in valued most.

நிழலின் அருமை, வெயிலில் தெரியும்.

 பொது அறிவு :

உலக அகதிகள் ஆண்டு (World Refugee Year) எது ?

     விடை :   1959/1960

சர்வதேச ஆரோக்கியம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி ஆண்டு (International Health and Medical Research Year) எது ?

    விடை :  1961

முக்கியச் செய்திகள் : 31.07.2023 – திங்கட்கிழமை

மாநிலச்செய்தி:

சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வரும் பிச்சாவரக்காடுகளில், காலநிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக வருகை தந்த பிரிட்டன் அமைச்சர் தெரசா கபே-க்கு இருளர் சமூக மக்கள், பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

உள்நாட்டுச்செய்தி:

சிங்கப்பூருக்குச் சொந்தமான புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்ளிட்ட 7 செயற்கைக்கோள்களுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்துபி.எஸ்.எல்.வி. சி-56’ ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது.

உலகச்செய்தி:

1.20 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பூமி தற்போது வெப்பநிலையில் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

விளையாட்டுச்செய்தி:

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், ஆஷஸ் டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Important News : 31.07.2023 – Monday

State News:

In Pichavarakadu, which is also a tourist destination, the British Minister Teresa Gabe, who visited to study climate change, was given a traditional welcome by the people of Ilur community.

National  News:

'PSLV' will be launched from the Satish Dhawan Space Center in Sriharikota along with 7 satellites including the Earth observation satellite belonging to Singapore. The C-56' rocket hurtled through the sky.

World News:

Shocking information has been released in the study that the temperature of the earth is currently the lowest in 1.20 lakh years.

Sports News:

England fast bowler Stuart Broad has announced his retirement from international cricket with the Ashes Test series.

Post a Comment (0)