பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 01 செப்டம்பர் 2023
திருக்குறள்
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
.வரதராசன் விளக்கம்:
செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.
பொன்மொழி :
தலைவிதி என்ற எண்ணமே தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலை உணர்வுகளை மரத்துப்போக செய்கின்றது. - அம்பேத்கர்
பழமொழி :
As the fool think so he bell clinks.
பயந்தவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
பொது அறிவு :
இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும்
ஏவுகணையின் பெயர் என்ன ?
விடை : அக்னி
முக்கியச் செய்திகள் : 01.09.2023- வெள்ளி
மாநிலச்செய்தி:
·
தமிழ்நாடு முதலமைச்சரின் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு குழந்தைகளுக்கான காலை
உணவு திட்டம் இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது என தெலங்கானா மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டுச்செய்தி:
·
உலகக்கோப்பை செஸ் போட்டியில் 2-ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு
பிரதமர் மோடி நேரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
உலகச்செய்தி:
·
லடாக்கில் விமானப்படை தளங்களை அமைத்து இந்தியா வலுவாக இருக்கிறது. அதற்கு பதிலடி தர சர்ச்சைக்குரிய அக்சாய் சின் பகுதியில் சீனா சுரங்கப்பாதை அமைக்கும் புகைப்படம் வெளியானது. இதை மிகைப்படுத்த வேண்டாம் என்று சீனா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
·
சிங்கப்பூர் நாட்டின் அதிபர் தேர்தல் நாளை நடக்கிறது. இதில், இந்திய வம்சாவளி தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
விளையாட்டுச்செய்தி:
·
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 2வது சுற்றில் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் டாரியா சவில்லேவை வீழ்த்தி 3வது சுற்றுக்குள் நுழைந்தார்.
Important News : 01.09.2023 – Friday
State News:
·
Telangana
state government officials have said that the Tamil Nadu Chief Minister's
breakfast program for children of class one to five is a guide for India.
National News:
·
Prime
Minister Modi personally congratulated Pragnananda who came 2nd in the World
Cup Chess Tournament.
World News:
·
India
is strong by setting up air force bases in Ladakh. In response, a photo of
China building a tunnel in the disputed Aksai Chin area was released. China has
been told not to overdo it.
·
Singapore's
presidential election will be held tomorrow. In this, it is said that the
Indian-origin Dharman Shanmugaratnam has a high chance of winning.
Sports News:
·
The
US Open tennis series, one of the Grand Slam series, is ongoing in the United
States. In the women's singles category, Poland's Ika Swiadek, the number one
player in the 2nd round, defeated Australia's Daria Saville 6-3, 6-4 and
entered the 3rd round.