பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 24 ஆகஸ்ட் 2023
திருக்குறள் :
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.
.வரதராசன் விளக்கம்:
மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.
பொன்மொழி :
மகிழ்ச்சியாய் நீ
வீணாக்கிய தருணங்கள் எல்லாம் வீணானவையல்ல.
பழமொழி :
The mustard is small but it is still too spicy.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.
பொது அறிவு :
ரஷ்யாவுக்கு அடுத்த பரப்பளவில் பெரிய நாடு எது
? விடை : கனடா
முக்கியச் செய்திகள் :24.08.2023 – வியாழன்
மாநிலச்செய்தி:
இஸ்ரோ விஞ்சானிகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது
டுவிட்டர் பக்கத்தில்
வாழ்த்து தெரிவித்தார்.
உள்நாட்டுச்செய்தி:
நிலவின் தென்துருவம் அருகே தரையிறங்கிய உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த வெற்றியால், அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனாவை தொடர்ந்து நிலவு பற்றிய ஆய்வில் சாதனை படைத்த 4-வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
உலகச்செய்தி:
இந்தியா மற்றும் ரஷ்யாவை அடுத்து நிலவுக்கு விண்கலம் அனுப்ப ஜப்பான் நாடு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன விளையாட்டுச்செய்தி:
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நார்வே வீரர் கார்ல்சன் மற்றும் தமிழக வீரர் பிரக்ஞானந்தா மோதிய 2 ஆம் சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்தது. டை பிரேக்கர் மூலம் வெற்றியை தீர்மானிக்கும் ஆட்டம் நாளை நடக்கிறது.
State News:
Tamil Nadu Chief Minister M. K. Stalin congratulated the ISRO volunteers
on his Twitter page.
National News:
India has become the first country in the world to land near the
South Pole of the Moon. With this success, India has become the 4th country to
achieve lunar exploration after USA, Russia and China.
World News:
It has been reported that Japan has decided to send a spacecraft to
the moon after India and Russia.
Sports News:
The 2nd round of the World Chess Championship between Norway's
Carlson and Tamil Nadu's Pragnananda also ended in a draw. The match will be
decided by a tie breaker tomorrow.