பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 25 ஆகஸ்ட் 2023
திருக்குறள் :
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
.வரதராசன் விளக்கம்:
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.
பொன்மொழி :
குழந்தைக்கு முதற்பாடம்
பணிவு.
பழமொழி :
A single tree does not make on orchard.
தனி மரம் தோப்பு ஆகாது.
பொது அறிவு :
சந்திராயன் – 3 நிலவில் எப்போது தரையிங்கியது
?
விடை : 23 ஆகஸ்டு 2023 – 6 மணி 4 நிமிடம்
மாநிலச்செய்தி:
தமிழக கல்வித்துறைக்காக ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன்
தலைமையில் அமைக்கப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கை தயாரிப்பு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், குழுவினரின் ஒப்புதல் பெறுவதற்காக 30ம் தேதி கூட்டம் நடக்க இருக்கிறது.
உள்நாட்டுச்செய்தி:
சந்திரன் ஆய்வைத்தொடர்ந்து சூரியனையும் ஆராய்ச்சி செய்யும் ஆர்வத்தில் 2023 செப்டம்பரில் ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக நம் நாட்டு இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர் .
உலகச்செய்தி:
உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார்.
விளையாட்டுச்செய்தி:
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டுதல் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ஜெஸ்வின் ஆல்ட்ரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அதற்கான தகுதிச்சுற்றில் 8 மீட்டர் நீளம் தாண்டி இறுதிப்போட்டிக்கு ஜெஸ்வின் ஆல்ட்ரின் தகுதிபெற்றார்.
Important News : 25.08.2023 – Friday
State News:
The state education policy preparation work headed by retired
Justice Murugesan for the Tamil Nadu education department has reached its final
stage, and a meeting will be held on the 30th to get the committee's approval.
National News:
Our country's ISRO scientists have said that they are planning to
launch the Aditya L1 spacecraft in September 2023 in the interest of studying
the moon and also studying the sun.
World News:
Norway's Magnus Carlsen won the World Cup Chess Finals
Sports News:
Jeswin Aldrin from Tamil Nadu has qualified for the finals in the
long jump category at the World Athletics Championships. Jesvin crossed 8
meters in the qualifying round for the final Aldrin qualified.