பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 26 ஆகஸ்ட் 2023

 

பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 26 ஆகஸ்ட் 2023

திருக்குறள் :

குறள் 21:

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

 

மு.வரதராசன் விளக்கம்:

ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.

 

பொன்மொழி :

உலகில் எப்படி வாழ்வது என்பதையாவது தெரிந்து கொள்ளும் அலவுக்கு உன்னை நீயே அறிந்து கொள்; அதுவே வாழ்க்கையில் நீ அடையத்தக்க பெரும் பெறு.

பழமொழி :

The mills of God grind slow but sure.

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொள்ளும்.

பொது அறிவு :

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார் ?

விடை : பி.டி.உஷா

 

முக்கியச் செய்திகள் :26.08.2023 – சனி


மாநிலச்செய்தி:           

தமிழகத்தில் வட்டார கல்வி அலுவலர் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் தங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்று டி.ஆர்.பி அறிவித்துள்ளது. வட்டாரக் கல்வி அலுவலர் பணித்தெரிவு தொடர்பான தேர்வு செப்.10ஆம் தேதி நடைபெறுகிறது. www.trb.tn.gov.in எனும் இணையதளத்தில் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

உள்நாட்டுச்செய்தி:

அசாம் மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இந்த ஆண்டு அக்டோபர் 2 முதல் மாநிலத்தில் 1000 மி.லி கொள்ளளவுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்துவதற்கும் உற்பத்தி செய்வதற்கும் தடை விதித்துள்ளது.

உலகச்செய்தி:

ஜப்பான்  நாடு சீனா, தென்கொரியா எதிர்ப்பை மீறி புகுஷிமா அணுஉலை கதிரியக்க கழிவுநீரை கடலில் கலந்தது.

 

விளையாட்டுச்செய்தி:

19 ஆவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர்கள் 3 பேர் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.குரூப் -வில் நீரஜ் சோப்ரா மற்றும் மனு ஆகியோரும், குரூப் பி -யில் கிஷோர் ஜெனா என்பவரும்  இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள்

Important News : 26.08.2023 – Saturday

State News:

TRP has announced that those who have applied for the district education officer exam in Tamil Nadu can download their exam admit card. District Education Officer Recruitment Exam will be held on 10th September. The Teachers Examination Board has announced that the admit card can be downloaded from the website www.trb.tn.gov.in.

National  News:

The Assam State Environment and Forest Department has banned the use and manufacture of plastic water bottles of less than 1000 ml capacity in the state from October 2 this year.

World News:

Japan dumped radioactive waste water from the Fukushima nuclear reactor into the ocean despite protests from China and South Korea.

Sports News:

3 Indian athletes have qualified for the finals of the javelin event at the ongoing World Athletics Championships. Neeraj Chopra and Manu have qualified for the finals in Group A and Kishore Jena in Group B.

Post a Comment (0)