பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 28 ஆகஸ்ட் 2023

 

பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 28 ஆகஸ்ட் 2023

திருக்குறள் :

குறள் 22:

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.


.வரதராசன் விளக்கம்:

பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.

 

பொன்மொழி :

அறிவு என்னும் கதவு திறந்தால் மட்டுமே அறியாமை என்னும் திரை அகலும்.

பழமொழி :

A constant guest is never welcome.

விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு.

பொது அறிவு :

ரப்பர், ஸ்டாம்பு, மை தயாரிக்க பன்படும் கலவை எது ?

விடை : கிளிசரால்

முக்கியச் செய்திகள் : 28.08.2023 – திங்கள்

மாநிலச்செய்தி:           

உலக தடகள சாம்பியன்ஷிப் ஆடவர் பிரிவில் 4×400மீ தொடர் ஓட்டப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி வரலாற்று சாதனை படைத்த இந்திய அணிக்கு முதல்வர் மு..ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டுச்செய்தி:

ரூப்கர் மாவட்டத்தை சேர்ந்த தீபக்சூத் என்பவரின் மகளான சான்வி சூத், மலையேற்றத்தில் சாதனை படைத்து வருகிறார். அவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இளம் சிறுமி என்ற சாதனை படைத்தார்.

உலகச்செய்தி:

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் புதிய குழுவாக 4 நாடுகளைச் சேர்ந்த 4 ஆய்வாளர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெற்றிகரமாக நேற்று விண்ணில் பாய்ந்தது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன

விளையாட்டுச்செய்தி:

ஆசிய கோப்பைக்கான இந்திய மகளிர் கால்பந்து அணியில் விளையாட 3 தமிழ்நாடு வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Important News : 28.08.2023 – Monday

State News:

Chief Minister M. K. Stalin has congratulated the Indian team for advancing to the final round of the men's 4x400m relay race at the World Athletics Championship and achieving a historic record.

National  News:

Sanvi Sood, daughter of Deepaksood from Rupkar district, is an accomplished trekker. She became the youngest girl to climb Mount Everest.

World News:

The SpaceX rocket successfully launched yesterday with 4 astronauts from 4 countries as the International Space Station's new crew. The United States, Russia, and Japan have jointly established the International Space Research Center.

Sports News:

3 Tamil Nadu players have been selected to play in the Indian women's football team for the Asia Cup.

Post a Comment (0)