பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 29 ஆகஸ்ட் 2023

 

பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 29 ஆகஸ்ட் 2023

திருக்குறள்:

குறள் 23:

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.


.வரதராசன் விளக்கம்:

பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.

 

பொன்மொழி :

முடியும் என்று உறுதியாக நினைத்தால்

முடியாதது எதுவும் இல்லை. - சுவாமி விவேகானந்தர்

பழமொழி :

Delay is dangerous.

தாமதம் தாழ்வுக்கு ஏதுவாகும்

 

பொது அறிவு :

இந்தியாவில் மீன் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது ?

விடை : மேற்கு வங்காளம்

முக்கியச் செய்திகள் : 29.08.2023 - செவ்வாய்

மாநிலச்செய்தி:           

தாலுகா காவல், சிறப்பு காவல்படை, ஆயுதப்படை எஸ். பணிகளுக்கு நடந்து முடிந்த எழுத்துத் தேர்வின் முடிவுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

உள்நாட்டுச்செய்தி:

இந்திய வெளியுறவு பணி அதிகாரியான கீதிகா ஸ்ரீவஸ்தவா, பாகிஸ்தானின் இஸ்லாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் துணை தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உலகச்செய்தி:

கூகுள் முதல் யூடியூப் வரை 20 பெரிய நிறுவனங்களில் இந்திய வம்சாவளிகள் தலைமை நிர்வாக அதிகாரிகளாக இருப்பது குறித்து எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்

விளையாட்டுச்செய்தி:

கான்பெரா ஓபன் ஸ்குவாஷ் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலவன் செந்தில்குமார் சாம்பியன் பட்டம் வென்றார்

 

நடப்பு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

Important News : 29.08.2023 – Tuesday

State News:

The Uniformed Staff Selection Commission has announced that the results of the written examination for Taluka Police, Special Police Force and Armed Forces SI posts will be published within a month.

National  News:

Geetika Srivastava, an Indian Foreign Service officer, has been appointed as Consul General at the Embassy of India in Islamabad, Pakistan.

World News:

Elon Musk has commented on the presence of Indian-origin CEOs in 20 largest companies, from Google to YouTube.

Sports News:

Tamil Nadu's Velavan Senthilkumar won the Canberra Open squash title.

 

India's Neeraj Chopra won gold in the ongoing World Athletics Championships. With this, he has created the record of becoming the first Indian to win gold in the World Athletics Championships.

Post a Comment (0)