பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 30 ஆகஸ்ட் 2023

 

பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 30 ஆகஸ்ட் 2023

திருக்குறள்

குறள் 24:

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.


.வரதராசன் விளக்கம்:

அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.

 

பொன்மொழி :

அமைதியை விட உயர்வான சந்தோசம் இந்த பூமியில் வேறு ஒன்றும் இல்லை - புத்தர்

பழமொழி :

Persistence never fails.

எறும்பு ஊற கல்லும் தேயும்

 

பொது அறிவு :

யோகா தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது ?

விடை : ஜுன் 21

முக்கியச் செய்திகள் : 30.08.2023 - புதன்

மாநிலச்செய்தி:           

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை குறைவால், பனை மரங்களில் பதநீர் வரத்து குறைந்து, பனங்கற்கண்டு உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது. இதனால், பனை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்

உள்நாட்டுச்செய்தி:

நிலவின் மேற்பரப்பில் கந்தகம் இருப்பதை உறுதி செய்துள்ளது சந்திரயான்-3  என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

உலகச்செய்தி:

குறிப்பிட்ட சில மின்னணு சாதனங்களின் இறக்குமதிக்கு இந்தியா கட்டுப்பாடுகள் விதித்துஉள்ளதற்கு, அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

விளையாட்டுச்செய்தி:

புடாபெஸ்டில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியின் பைனலில் பங்கேற்ற இந்திய வீராங்கனை பாருல் சவுதாரி 9 நிமிடம், 15.31 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து 11வது இடம் பிடித்தார். பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தாலும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பாருல் சவுதாரி தகுதி பெற்றதுடன், 2016 ரியோ ஒலிம்பிக்சில் லலிதா பாபர் படைத்த தேசிய சாதனையையும் (9:19.76 விநாடி) முறியடித்து அசத்தினார்.

Important News : 30.08.2023 – Wednesday

State News:

In Ramanathapuram district last year due to lack of North East Monsoon rains, water supply to palm trees decreased and production of palm kernels decreased by half. Due to this, palm farmers are worried.

National  News:

Chandrayaan-3 has confirmed the presence of sulfur on the surface of the moon, ISRO said.

World News:

The US has expressed concern over India's restrictions on the import of certain electronic devices.

Sports News:

India's Parul Choudhary clocked 9 minutes, 15.31 seconds to finish 11th in the women's 3000m steeplechase final at the World Athletics Championships in Budapest. Despite missing out on a medal, Parul Chaudhary qualified for next year's Paris Olympics and broke the national record (9:19.76 seconds) set by Lalita Babar at the 2016 Rio Olympics.



 





 



Post a Comment (0)