பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 31 ஆகஸ்ட் 2023
திருக்குறள்
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
.வரதராசன் விளக்கம்:
ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.
இந்த உலகில் எப்போதும் நிலைத்திருக்கும் சக்தி உண்மைக்குத் தான் உண்டு - புத்தர்
பழமொழி :
A fog can not be dispelled with a fan.
சூரியனை கையால் மறைக்க முடியுமா ?
பொது அறிவு :
வேதியியலின் தந்தை யார் ?
விடை : இராபர்ட் பாயில்
முக்கியச் செய்திகள் : 31.08.2023- வியாழன்
மாநிலச்செய்தி:
சென்னை ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை ஊர்க்காவல்படையில்
சேர விருப்பமுடைய ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உள்நாட்டுச்செய்தி:
‘பிரக்யான்’ ரோவர் வெளியிட்ட புது தகவலின்படி நிலவின் மேற்பரப்பில் கந்தகம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதாகவும், ஹைட்ரஜன் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
உலகச்செய்தி:
இந்தியாவில் 122 ஆண்டுகளில் எந்த ஆகஸ்ட் மாதத்திலும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் வறட்சியான மாதம் ஆக பதிவாகி உள்ளது. பசிபிக் பெருங்கடலில் கடற்பரப்பில் ஏற்படும் வெப்பநிலை மாற்றமான எல் நினோ பாதிப்பு தீவிரம் அடைந்து வருவதால் புவியின் வெப்பம் அதிகரித்து வருகிறது.
விளையாட்டுச்செய்தி:
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான யு.எஸ் ஓபன் டென்னிஸ்தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் 2வது நாளான இன்று அதிகாலை மகளிர் ஒற்றையர் பிரிவில் 2ம் நிலை வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, பெல்ஜியத்தின் மரினா ஜானெவ்ஸ்காவுடன் மோதினார். இதில் 6-3,6-2 என சபலென்கா வென்று 2வதுசுற்றுக்குள் நுழைந்தார்.
Important News : 31.08.2023 – Thursday
State News:
Applications are invited to join the Chennai
Home Guard. Applications are invited from men and women who are willing to join
the Chennai Home Guard.
National News:
According to the new information released by
the 'Pragyan' rover, there are elements including sulfur on the surface of the
moon, and is there hydrogen? ISRO has announced that a study is being
conducted.
World News:
August this year has been recorded as the
driest month in India in 122 years. Global warming is increasing as the El Nino
effect, a change in sea surface temperature in the Pacific Ocean, is
intensifying.
Sports News:
The US Open tennis series, one of the Grand
Slam series, is underway in New York. On the 2nd day, early this morning in the
women's singles category, the 2nd ranked player Aryna Sabalenka of Belarus
clashed with Marina Janevska of Belgium. Sabalenka won 6-3, 6-2 and entered the
2nd round.