பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 15 ஆகஸ்ட் 2023
திருக்குறள் :
அதிகாரம் : வான்சிறப்பு
குறள் : 12
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
பொருள் : உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்..
பொன்மொழி :
பழமொழி :
All things come to those who wait.
பொறுத்தவர் பூமி ஆள்வார்.
பொது அறிவு :
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு எது ?
விடை : 1919
முக்கியச் செய்திகள் :15.08.2023 – செவ்வாய்
மாநிலச்செய்தி:
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
உள்நாட்டுச்செய்தி:
நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள சந்திரயான் - 3 விண்கலம், இன்று அடுத்தக்கட்ட நிலைக்கு செலுத்தப்பட்டது. நிலவிற்கும் சந்திரயான்-3 விண்கலத்திற்கும் இடையிலான தூரம் 3வது முறையாக குறைக்கப்பட்டது.
உலகச்செய்தி:
பெய்ஜிங்: ஆசியாவிலேயே மிகவும் உயரமான மரம் ( சைப்ரஸ் மரம் ) தென்மேற்கு சீனாவின் ஸிஸாங் மாகாணத்தின் மலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சைப்ரஸ் மரம் 101.2 மீட்டர் உயரம் உள்ளது தெரியவந்துள்ளது. அத்துடன் இது சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது.
விளையாட்டுச்செய்தி:
கனடாவில் நடந்த சர்வதேச அளவிலான காவல் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கான விளையாட்டு போட்டி: 41 பதக்கங்களை வென்று தமிழக காவல்துறைக்கு பெருமை
Important News : 15.08.2023 – Tuesday
State News:
Tamil Nadu, Puducherry and Karaikal regions are likely to experience light to moderate rain with thunder and lightning at a few places for the next 3 days, according to the Chennai Meteorological Department.
National News:
The Chandrayaan-3 spacecraft, which has been sent to explore the moon, was launched into its next phase today. The distance between the moon and Chandrayaan-3 spacecraft has been reduced for the 3rd time.
World News:
Beijing: Asia's tallest tree (cypress tree) has been discovered in the mountainous region of Xisang Province in southwest China. This cypress tree is found to be 101.2 meters tall. Also it is about 1500 years old.
Sports News:
International Police and Fire Sports Competition held in Canada: Tamil Nadu Police proud to win 41 medals