பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 21 ஆகஸ்ட் 2023
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
.வரதராசன் விளக்கம்:
வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.
பொன்மொழி :
பழமொழி :
மதிப்பும் ஆதாயமும்
ஒரே கோணியில்
இராது.
Honour and profit lie not in one sack
பொது அறிவு :
டெல்லிக்கு முன்பு இந்தியாவின் தலைநகரம் எது ?
விடை : கொல்கத்தா (1911 வரை)
முக்கியச் செய்திகள் :21.08.2023 – திங்கள்
மாநிலச்செய்தி:
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நெல்லை பாளையங்கோட்டையில் 103.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
உள்நாட்டுச்செய்தி:
சந்திராயன் 3 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர், ஆகஸ்ட் 23ல் மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிரங்கும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
உலகச்செய்தி:
ரஷ்யா அனுப்பிய லூனா – 25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது. ரஷ்யா விண்கலம் விழுந்து நொறுங்கியதால் நிலவில் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது.
விளையாட்டுச்செய்தி:
மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றது.
Important News : 21.08.2023 – Monday
State News:
The Chennai Meteorological Department
informed that the highest temperature in Tamil Nadu was recorded at 103.6
degrees Fahrenheit at Nellai Palayangottai.
National News:
ISRO has officially announced that the Vikram
lander, separated from the Chandrayaan 3 spacecraft, will land on the moon on
August 23 at 6.04 pm.
World News:
Luna-25 spacecraft sent by Russia crashed on
the moon. India becomes the first country to land a spacecraft on the South
Pole of the Moon after a Russian spacecraft crashed.
Sports News:
Spain beat England 1-0 to win the Women's
World Cup.