பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 23 ஆகஸ்ட் 2023
திருக்குறள் :
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
.வரதராசன் விளக்கம்:
மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.
பொன்மொழி :
பணம் தலைகுனிந்து
பணியாற்றும் அல்லது தலைகுப்புறத் தள்ளிவிடும்.
பழமொழி :
Least sided, sooner mended.
யாகாவாராயினும் நாகாக்க.
பொது அறிவு :
பிளாசிப் போர் எப்போது நடைபெற்றது?
விடை: சிராஜ் உத் தெளலாக்கும் இராபர்ட்கிளைவ்க்கும் இடையே ஜூன் 23,
1757 நடைபெற்றது
முக்கியச் செய்திகள் :23.08.2023 – புதன்
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள
இமாச்சலப் பிரதேச மாநிலத்துக்கு தமிழ்நாடு சார்பாக ரூ.10 கோடி நிதியுதவி வழங்கப்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளனர்.
உள்நாட்டுச்செய்தி:
காவிரி நதிநீர் பங்கீடு வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றத்தின்
3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு அறிவித்து உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, பி.கே.மிஸ்ரா அடங்கிய புதிய அமர்வை நியமித்துள்ளது.
உலகச்செய்தி:
பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை மீறி ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் அணு கழிவுகள் நிறைந்த நீரை நாளை மறுநாள் (24-08-2023) கடலில் வெளியேற்றவுள்ளதாக
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவித்துள்ளார்.
விளையாட்டுச்செய்தி:
அமெரிக்காவில் நடைபெற்ற வெஸ்டர்ஸ் & சதர்ன் சின்சினாட்டி ஒபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச் 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
Important News : 23.08.2023 – Wednesday
State News:
Chief Minister M.K.Stalin has announced that the state of Himachal
Pradesh, which is affected by the natural calamity, will be given Rs. 10 crore
financial assistance on behalf of Tamil Nadu.
National News:
The Supreme Court has announced a new bench of 3 judges to hear the
Cauvery water sharing case. It appointed a new bench comprising Justices PR
Kawai, PS Narasimha and PK Misra.
World News:
Japan's Prime Minister Fumio Kishida has announced that the
Fukushima nuclear power plant's nuclear waste water will be discharged into the
sea the day after tomorrow (24-08-2023) despite the protests of various
countries.
Sports News:
Serbian star Novak Djokovic won the men's singles title at the
Western & Southern Cincinnati Open tennis series held in USA for the 3rd
time.