பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 04 ஆகஸ்ட் 2023

 

பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 04 ஆகஸ்ட் 2023

திருக்குறள் :

குறள் 5:

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

.வரதராசன் விளக்கம்:

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

 

பொன்மொழி :


 இதயம் சொல்வதைச் செய்வெற்றியோதோல்வியோஅதைத்தாங்கும் சக்திஅதற்கு மட்டும் தான் உண்டு.

 – சுவாமி விவேகானந்தர்

 

பழமொழி :

Give neither advice nor salt till you are asked for it.

உப்பும் அறிவுரையும் கேளாமல் தராதே.

 பொது அறிவு :

நமது உடலில் மிகக் குறுகிய எலும்பு எது?
விடை: ஸ்டேப்ஸ் (காதில் காணப்படும்)

    

முக்கியச் செய்திகள் :04.08.2023 – வெள்ளி

 மாநிலச்செய்தி:

தமிழக அரசின் பொது பாடத்திட்டத்தை நடப்பாண்டில் அமல்படுத்த முடியாது என தன்னாட்சி கல்லுாரி முதல்வர்கள் திட்டவட்டமாக அறிவித்து விட்டனர்.

உள்நாட்டுச்செய்தி:

டில்லி அரசு அதிகாரிகள் நியமன அவசர சட்டம் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.


உலகச்செய்தி:

பிரிட்டன் அரசு கொண்டு வந்துள்ள புதிய எண்ணெய், எரிவாயு வரிவாக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பிரதமர் ரிஷி சுனாக் வீட்டை கறுப்பு துணியால் மூடும் போராட்டத்தை நடத்தினர்.


விளையாட்டுச்செய்தி:

சென்னையில் துவங்கிய ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டியில் முதல் போட்டியில் தென் கொரியா - ஜப்பான் அணிகள் மோதின. இந்த போட்டியில் 2-1 என்ற கோல்க்கணக்கில் தென்கொரிய அணி வெற்றி பெற்றது.

 Important News : 04.08.2023 – Friday

State News:

The principals of the autonomous colleges have categorically announced that the general curriculum of the Tamil Nadu government cannot be implemented this year.

National  News:

Delhi Government Officers Appointment Ordinance passed in Lok Sabha.

World News:

 In protest against the new oil and gas tax plan brought by the British government, the country's environmentalists staged a protest covering Prime Minister Rishi Sunak's house with a black cloth.

Sports News:

South Korea and Japan clashed in the first match of the Asia Cup men's hockey tournament that started in Chennai. The South Korean team won the match with a score of 2-1.

 

Post a Comment (0)