பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 11 ஆகஸ்ட் 2023
திருக்குறள் :
குறள் 10:
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
.வரதராசன் விளக்கம்:
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.
பொன்மொழி :
Only when in the sun do you miss the shade.
நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும்.
பொது அறிவு :
எவரெஸ்ட் சிகரத்தில் முதலில் ஏறியவர்கள் யார்?
விடை: எட்மண்ட் ஹிலாரி மற்றும் ஷெர்பா டென்சிங் நோர்கே
முக்கியச் செய்திகள் :11.08.2023 – வெள்ளி
மாநிலச்செய்தி:
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் காலை 10 மணிக்கு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது
உள்நாட்டுச்செய்தி:
உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
உலகச்செய்தி:
காற்று மாசு பாதிப்பு அதிகம் உள்ள நகரங்களில் இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தா உலக அளவில் முதலிடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
விளையாட்டுச்செய்தி:
உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டம்
வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீனுக்கு கார் பரிசு வழங்கி மஹிந்திரா நிறுவனம் கவுரவித்துள்ளது.
Important News : 11.08.2023 – Friday
State News:
Under the leadership of Tamil
Nadu Chief Minister M.K.Stalin, an oath-taking ceremony will be held in Chennai
today (Friday) at 10 am to create awareness among students and youth about the
dangers of drugs.
National News:
Union Finance Minister
Nirmala Sitharaman said that India is the fastest growing economy in the world.
World News:
According to the report,
Jakarta, the capital of Indonesia, is the most polluted city in the world.
Sports News:
Mahindra Company has honored Indian Boxer Nikat Zareen who won the
World Boxing Champion title by gifting a car.