பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 02 ஆகஸ்ட் 2023

 

பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 02 ஆகஸ்ட் 2023

திருக்குறள் :

குறள் 3:

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

மு.வரதராசன் விளக்கம்:

அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்


பொன்மொழி :

 சுடுகாட்டுக்கு அப்பாலும் நம்மைத் தொடர்ந்து வருகிற ஒரே நண்பன் நல்லொழுக்கமே. மற்றவை யாவும் மரணத்துடன் முடிந்துவிடும்.

 – சுவாமி விவேகானந்தர்


பழமொழி :


A good when lost in valued most.

நிழலின் அருமை வெயிலில் தெரியும்.

 பொது அறிவு :

உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ?

     விடை :   கரையான்

முக்கியச் செய்திகள் :02.08.2023 – புதன்

மாநிலச்செய்தி:

புவிசார் குறியீடு – தமிழகம் முதலிடம். தற்போது கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம், ஐடேரி திருமண் நாமக்கட்டி மற்றும் வீரவநல்லூர் செடிபுட்டா சேலை ஆகிய 3 பொருள்களுக்கு மத்திய அரசு  புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. மொத்தம் தமிழகத்திற்கு இதுவரை 58 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

உள்நாட்டுச்செய்தி:

ரூ.2 ஆயிரம் நோட்டுகளில் 88% திரும்பப் பெறப்பட்டுள்ளன: ரிசர்வ் வங்கி தகவல்...

உலகச்செய்தி:

'சர்ச்சைக்குரிய 13வது சட்ட திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவதன் வாயிலாக, அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை இலங்கை தமிழர்களுக்கு வழங்க வேண்டும்' என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது...

விளையாட்டுச்செய்தி:

நடைபெற இருக்கும் அயர்லாந்து தொடருக்கான T20 போட்டிகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பந்து வீச்சாளர் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.


Important News : 02.08.2023 – Wednesday

State News:

Geocode – Tamil Nadu is number one. At present, the central government has given geographical indication to 3 products namely Kanyakumari Matti Banana, Ideri Suryawan Namakatti and Veeravanallur Sediputta Selai. A total of 58 objects have been geocoded for Tamil Nadu so far.

National  News:

88% of Rs 2,000 notes withdrawn: RBI informs...

World News:

The Tamil National Federation has insisted that 'meaningful devolution should be provided to Sri Lankan Tamils through the full implementation of the controversial 13th Amendment...

Sports News:

Bowler Bumrah has been appointed as the captain of the Indian cricket team for the upcoming T20 series in Ireland.

Post a Comment (0)