பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - Today 16.08.2023

 

பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 16 ஆகஸ்ட் 2023

திருக்குறள் :

குறள் 13:

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.


.வரதராசன் விளக்கம்:

மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.

 

பொன்மொழி :

 

தீமையை நன்மையால் வெல்லுங்கள். பொய்யினை உண்மையால் வெல்லுங்கள். – புத்தர்


பழமொழி :


When in Rome, Do as Rome does.

ஊரோடு ஒத்து வாழ்.


பொது அறிவு :

நிலவில் பருத்தி செடியை வளர்த்த நாடு எது ?

விடை : சீனா


முக்கியச் செய்திகள் :16.08.2023 – புதன்

 

மாநிலச்செய்தி:

மாணவர்களிடையே நேர்மை பண்பை வளர்க்கும் வகையில் எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில்நேர்மையாளர்கள் கடைதிறக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுச்செய்தி:

சுதந்திர தினத்தையொட்டி நேற்று டெல்லி போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்கள் மரியாதை செலுத்தினார்.


உலகச்செய்தி:

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69.07 லட்சத்தை தாண்டியது. உலகம் முழுவதும் கொரோனாவால் 693,573,317 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 665,365,453 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 37,358 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


விளையாட்டுச்செய்தி:

அஜர்பைஜானில் நடைபெறும் உலக கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ், .பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி ஆகியோர் ஓபன் பிரிவில் காலி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்


Important News : 16.08.2023 – Wednesday

State News:

In order to inculcate the character of honesty among the students, an 'honesty shop' has been opened in Egumalai Government Boys' High School.

National  News:

Yesterday President Draupadi Murmu paid homage at the Delhi War Memorial on the occasion of Independence Day.

World News:

The number of people who have died due to Corona has crossed 69.07 lakhs across the world. 693,573,317 people have been affected by Corona around the world and 665,365,453 people have recovered. Another 37,358 people are being treated in hospital in a critical condition.

Sports News:

India's D. Gukesh, A. Pragnananda and Arjun Erikaisi advanced to the semi-finals of the World Cup Chess Tournament in Azerbaijan.




 

 

 

Post a Comment (0)