பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 17 ஆகஸ்ட் 2023
திருக்குறள் :
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
.வரதராசன் விளக்கம்:
மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.
பொன்மொழி :
பழமொழி :
When in Rome, Do as Rome does.
ஊரோடு ஒத்து வாழ்.
பொது அறிவு :
இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் எது
?
விடை: வால்வாக்ஸ்
முக்கியச் செய்திகள் :17.08.2023 – வியாழன்
மாநிலச்செய்தி:
தமிழகத்தில் 2,381 அரசுப்பள்ளிகளில் படிக்கும் எல்கேஜி, யுகேஜி மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
உள்நாட்டுச்செய்தி:
கேரளாவில் 2024 ஆம் ஆண்டு முதல் POCSO சட்டம் குறித்த விழிப்புணர்வு பாடங்களை பள்ளி பாடத்திட்டத்தில் இணைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
உலகச்செய்தி:
கடந்த 140 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு இந்தாண்டு ஜூலை மாதத்தில் அதிக புவி வெப்பம் பதிவாகி உள்ளதாக நாசா தகவல் அளித்துள்ளது.
விளையாட்டுச்செய்தி:
மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
Important News : 17.08.2023 –
Thursday
State News:
In order to improve the educational standard of LKG and UKG
students studying in 2,381 government schools in Tamil Nadu, the Department of
School Education has arranged to provide training to teachers.
National News:
In Kerala, the state government has decided to include awareness
lessons on the POCSO Act in the school curriculum from 2024.
World News:
According to NASA, the highest global temperature has been
recorded in July this year.
Sports News:
Spain is the first team to advance to the finals of the Women's
World Cup football series.