பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 18 ஆகஸ்ட் 2023




 

பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 18 ஆகஸ்ட் 2023

திருக்குறள் :

குறள் 15:

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.


.வரதராசன் விளக்கம்:

பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.

 

பொன்மொழி :

 

ஓடாத நதியும், தேடாத மனமும் தெளிவுகொள்ளாது.

பழமொழி :

A drawing man will catch at a straw.

நீரில் மூழ்குபவனுக்கு துரும்பும் தெப்பமாகும்.


பொது அறிவு :

புதிதாகப் பிறந்த குழந்தைக்கு எத்தனை எலும்புகள் உள்ளன?
விடை: 300

    

முக்கியச் செய்திகள் :18.08.2023 – வெள்ளி

 

மாநிலச்செய்தி:

தண்ணீரை சேமிக்க தமிழ்நாட்டில் எந்த திட்டமும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை என்று மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

உள்நாட்டுச்செய்தி:

சந்திரயான்-3 உந்து சக்தி கலனில் இருந்து வெற்றிகரமாக விக்ரம் லேண்டர் பிரிந்ததாக இஸ்ரோ ட்வீட் செய்துள்ளது.

உலகச்செய்தி:

இந்திய மருத்துவத்துறை யூடியூப் தளத்தில் வெளியிடக்கூடிய மருத்துவம் சார்ந்த வீடியோக்களை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விளையாட்டுச்செய்தி:

அமெரிக்காவில் நடைபெறும் வெஸ்டர்ஸ் மற்றும் சதர்ன் சின்சினாட்டி ஒபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட உள்ளூர் நட்சத்திரம் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் தகுதி பெற்றார்.

 

Important News : 18.08.2023 – Friday

State News:

Madurai High Court Judges are dissatisfied that no plan has been set up in Tamil Nadu to save water.

National  News:

ISRO tweeted that the Vikram lander has successfully separated from the Chandrayaan-3 propulsion system.

World News:

The Indian Medical Department has been advised to examine the medical videos that may be posted on YouTube.

Sports News:

Local star Sloane Stephens has qualified for the women's singles 3rd round of the Westerns and Southern Cincinnati Open tennis series in the US.




 

 

 

Post a Comment (0)