பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 03 ஆகஸ்ட் 2023
குறள் 4:
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
.வரதராசன் விளக்கம்:
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை
பொன்மொழி :
சுமைகளை கண்டு
நீ துவண்டு விடாதே ! இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில் தான் ! . . .
– சுவாமி விவேகானந்தர்
பழமொழி :
Think before you speak
பேசும் முன் யோசி.
பொது அறிவு :
நமது
அசோகச்சக்கரத்தில் எத்தனை விலங்குகள் உள்ளன ?
விடை : 6 விலங்குகள்
முக்கியச் செய்திகள் :03.08.2023 – வியாழன்
மாநிலச்செய்தி:
குரூப் 1 முதன்மை எழுத்து தேர்வு வரும் 10 முதல் 13ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது.
உள்நாட்டுச்செய்தி:
பெண்களுக்கு அதிகாரமளிப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சி வேகமடையும் என குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற ஜி20 அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
உலகச்செய்தி:
“எந்தச் சூழ்நிலையிலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்போம்,” என, சீன அதிபர் ஷீ ஜின்பிங் கூறியுள்ளார்.
விளையாட்டுச்செய்தி:
16 ஆண்டுகளுக்கு
பிறகு 7ஆவது ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.
Important News : 03.08.2023 – Thursday
State News:
Group 1 Main Written Examination is going to be held in Chennai
from 10th to 13th. The hall ticket for this has been released on TNPSC website.
National News:
Prime Minister Narendra Modi said at the G20 Ministerial
Conference held in Gujarat that the development of the country will be
accelerated by empowering women.
World News:
"We will support Pakistan under any circumstances,"
said Chinese President Xi Jinping.
Sports News:
After 16 years, the 7th
Asia Cup hockey tournament starts today in Chennai.

