பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 04 செப்டம்பர் 2023

 பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 04 செப்டம்பர் 2023

திருக்குறள்

குறள் 27:

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.


மு.வரதராசன் விளக்கம்:

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.

 

 

பொன்மொழி :

கொஞ்சம் பேசி நிறைய கேட்டு அதிகம் பகிர்வதே அனுபவம்.

பழமொழி :

All that glitters is not gold.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

 

பொது அறிவு :

முகலாய மன்னர் அக்பர் எங்கு பிறந்தார் ?

விடை : அமரக்கோட்டை

முக்கியச் செய்திகள் : 04.09.2023- திங்கள்

மாநிலச்செய்தி:

வடக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

உள்நாட்டுச் செய்தி :

நேற்று முன் தினம் விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது

உலகச்செய்தி:

சிங்கப்பூரில் 12 ஆண்டுக்குப் பின் நடந்த அதிபர் தேர்தலில் தமிழர் தர்மன் சண்முகரத்னம் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளுடன் அமோக வெற்றி பெற்றார்

விளையாட்டுச்செய்தி:

பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.  இந்தியா-நேபாளம் அணிகள் நாளை மோத உள்ளன.

 

Important News : 04.09.2023 – Monday

State News:

 

In the next 24 hours, a low pressure area will develop over the North Bay of Bengal and will develop into a low pressure area in the next 48 hours, the India Meteorological Department has informed.

National  News:

ISRO informed that the altitude of the orbit of the Aditya L1 spacecraft, which was launched yesterday, has been increased.

World News:

In Singapore's presidential election after 12 years, Tamil Dharman Shanmukaratnam won a landslide victory with more than 70 percent of the vote

Sports News:

Pakistan qualified for the Super 4 round. India-Nepal teams are going to clash tomorrow.
Post a Comment (0)