நிம்மதி


 நிம்மதி - இதை

வைத்திருப்பவர்களை விட தேடுபவர்களே அதிகம் - ஆம்

தேடிக் கண்டுபிடித்தவர்கள் யாரும் இல்லை இது நாள் வரை


உண்மையில் நிம்மதி எங்கும் இல்லை

எங்கும் தேடத்தேவையும் இல்லை


இது உம்மில் உள்ளது

உம் மனதில் உள்ளது - ஆம்


உம் மனதை தூய்மையில் உள்ளது - நிம்மதி

உம் மனதை தெளிவில் உள்ளது - நிம்மதி


உமக்கு பிடித்த செயலில் உள்ளது - நிம்மதி

உமக்கு பிடித்தவரோடு வாழ்வதில் உள்ளது - நிம்மதி


உமக்காக வாழ்பவரோடு வாழ்வதில் உள்ளது - நிம்மதி

உம் உதவும் குணத்தில் உள்ளது - நிம்மதி


உம்மில் தேடுவதே - நிம்மதி

உம்மில் விடுத்து வெளியே தேடுவதல்ல - நிம்மதி


உம் உண்மையில் உள்ளது - நிம்மதி

உம் பொறுமையில் உள்ளது - நிம்மதி


உம் அன்பில் உள்ளது - நிம்மதி

உம் பண்பில் உள்ளது - நிம்மதி


உம் உயர் சிந்தையில் உள்ளது - நிம்மதி

உம் தொண்டில் உள்ளது - நிம்மதி


உம் கனவில் உள்ளது - நிம்மதி

உம் நினைவில் உள்ளது - நிம்மதி


மொத்தத்தில் உம்மில் உறைந்துள்ள

நிறைந்துள்ள நிம்மதியை தேடாதே

வெளியே என்றும் . . . 

தேடு அதை உம்மில் மட்டும் . . . 

                                                                                                    இவண்,

                                                          நிம்மதியைத் தேடுபவரில் ஒருவன்

                                                                      


 

Post a Comment (0)