பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் Today 11.09.2023 School Morning Prayer Activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் Today 11.09.2023 School Morning Prayer Activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் – 11.09.2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் Today, School Morning Prayer Activities
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் Today Activities


திருக்குறள்

குறள் 31:

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு

மு.வரதராசன் விளக்கம்:

  • அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?.

பொன்மொழி :

பொருள் இல்லாதவனை ஏழை என்று உலகம் எண்ணுகிறது. உண்மையில் ஆசை அதிகம் உள்ளவனே ஏழை.

பழமொழி :

A guilty conscience needs no accuser
குற்றமுள்ள நெஞ்சு குறு குறுக்கும்

பொது அறிவு :

திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் எத்தனை?

விடை : 42,194

முக்கியச் செய்திகள் : 11.09.2023- திங்கள்

மாநிலச்செய்தி:

'ஹைபிரிட்' எனப்படும், ஒரே இடத்தில் காற்றாலை மற்றும் சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கும் பணியை, விரைவில் தமிழக மின்வாரியம் துவக்க உள்ளது. 

உள்நாட்டுச் செய்தி :

டெல்லியில் நடைபெற்று வரும் ஜி-20 மாநாட்டின் 2ம் நாள் கூட்டத்தில் தலைமை பொறுப்பை பிரேசிலிடம் ஒப்படைத்தார் பிரதமர் மோடி,அடுத்த ஜி-20 மாநாட்டை நடத்தும் தலைமை பொறுப்பை பிரேசிலிடம் பிரதமர் மோடி ஒப்படைத்தார். 

உலகச்செய்தி:

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, 'நாசா' வின், 'சந்திரன் - செவ்வாய் கிரக ஆராய்ச்சி திட்டத்தின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொறியாளர் ஷாக்ட்ரியா நியமிக்கப்பட்டுள்ளார். 

விளையாட்டுச்செய்தி:

இங்கிலாந்து-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 4 போட்டிகள் கொண்ட டி.20 தொடர் 2-2 என சமனில் முடிந்த நிலையில், அடுத்ததாக 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டி நேற்று நடந்தது. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

School Morning Prayer Activities in English Today

Important News : 11.09.2023 – Monday

State News:

The Tamil Nadu Power Board is soon going to start the construction of 'Hybrid' wind and solar power plants at the same location.

National  News:

Prime Minister Modi entrusted Brazil with the leadership of the 2nd day of the G-20 summit in Delhi.

World News:

Indian-origin engineer Shaktriya has been appointed as the head of NASA's 'Moon-Mars Exploration Program'.

Sports News:

The 4-match T20I series between England and New Zealand ended in a 2-2 draw, and the first match of the next 4-match ODI series took place yesterday. New Zealand won the match by 8 wickets.





Post a Comment (0)