பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் – 20.09.2023

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் – 20.09.2023

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் Today, School Morning Prayer Activities
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் Today Activities


திருக்குறள்

குறள் 37:

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

மு.வரதராசன் விளக்கம்:

பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.

பொன்மொழி :

சில நேரங்களில் வரும் இடைஞ்சல்கள் நாம் செய்யும் தவறால் அல்ல, இன்னும் சிறப்பாக நிகழ்த்தவே.

பழமொழி :

A honey tongue and a heart of gall.
அடி நாக்கிலே நஞ்சம், நுனி நாக்கிலே தேனும்.

பொது அறிவு :

தனித்தமிழ் இயக்கத் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்?

விடை : மறைமலை அடிகள்

முக்கியச் செய்திகள் : 20.09.2023- புதன்

மாநிலச்செய்தி:

தமிழகம் முழுவதும் 50,000 அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அதிவேக இணையதள வசதியை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை செயல்படுத்தும் திட்டம் துவங்கி உள்ளது என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

உள்நாட்டுச் செய்தி :

புது பார்லிமென்ட் லோக்சபாவில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் மேக்வால் தாக்கல் செய்தார். 

உலகச்செய்தி:

சீனாவிலிருந்து புறப்பட்டுள்ள ஷி யான் 6 என்ற உளவு கப்பல் இலங்கைக்கு இம்மாத இறுதியில் வந்து 17 நாட்கள் முகாமிட உள்ளது. இந்த உளவு கப்பலால் இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.  

விளையாட்டுச்செய்தி:

மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, கனடா வீராங்கனை லெய்லா பெர்னாண்டஸ் தகுதி பெற்றார். 

School Morning Prayer Activities in English Today

Important News : 20.09.2023 – Wednesay

State News:

Officials have informed that the Tamil Nadu Information Technology Department has started a project to provide high-speed internet facility to 50,000 government offices and schools across Tamil Nadu.

National  News:

Union Law Minister Arjun Meghwal tabled the Women's Reservation Bill in the new Lok Sabha.

World News:

The spy ship Shi Yan 6, which has left China, will arrive in Sri Lanka at the end of this month and will camp for 17 days. This spy ship poses a security threat to India.

Sports News:

Canada's Leila Fernandez has qualified for the Women's Singles 2nd Round of the Mexico Open Tennis Series.

Post a Comment (0)