பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் – 21.09.2023

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் – 21.09.2023

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் Today, School Morning Prayer Activities
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் Today Activities


திருக்குறள்

குறள் 38:

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.

மு.வரதராசன் விளக்கம்:

அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.

பொன்மொழி :

சந்தேகத்தை எரித்துவிடு, நம்பிக்கையை விதத்து விடு, மகிழ்ச்சி தானாகவே மலரும்.

பழமொழி :

A young calf knows no fear.
இளங்கன்று பயமறியாது.

பொது அறிவு :

தமிழ்நாட்டில் அக்மார்க் நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?

விடை : விருதுநகர்

முக்கியச் செய்திகள் : 21.09.2023- வியாழன்

மாநிலச்செய்தி:

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் பதிப்பிக்கப்பட்டுள்ள அனைத்து நுால்களையும் பாதி விலையில் விற்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதால், தமிழறிஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

உள்நாட்டுச் செய்தி :

ஒடிசா சட்டசபை சபாநாயகராக பிரமிளா மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார். 

நீட் பிஜி தேர்வில் கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைத்து இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது. அதன்படி, நீட் பிஜி தேர்வில் ஜீரோ மதிப்பெண் எடுத்தாலும் முதுநிலை மருத்துவ படிப்பில் சேரலாம்

உலகச்செய்தி:

பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில், கனடா எவ்வளவு முயன்றும், இந்தியாவிற்கு கண்டனம் தெரிவிக்க அமெரிக்கா மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது..  

விளையாட்டுச்செய்தி:

ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பவுலர் தரவரிசையில் இந்தியாவின் சிராஜ், மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறினார். 

School Morning Prayer Activities in English Today

Important News : 21.09.2023 – Thursday

State News:

Tamil scholars are happy as the plan to sell all published books at half price has been started by Central Institute of Classical Tamil Studies.

National  News:

Pramila Malik has been appointed as the Speaker of the Odisha Assembly.

The Medical Council of India has announced that the cut-off marks for the NEET PG exam will be reduced to zero. Accordingly, even if you get zero marks in NEET PG exam, you can get admission in postgraduate medical course.

World News:

In the matter of the killing of terrorist Hardeep Singh Nijjar, it has been reported that the US has refused to condemn India despite Canada's efforts.

Sports News:

India's Siraj has once again climbed to the top spot in the ICC ODI bowler rankings.

Post a Comment (0)