பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் – 22.09.2023
![]() |
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் Today Activities |
திருக்குறள்
குறள் 39:
புறத்த புகழும் இல.
மு.வரதராசன் விளக்கம்:
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.
பொன்மொழி :
நீங்கள் அடைவதெல்லாம் இறைவன் உங்களுக்குத் தரும் பரிசு, இழப்பதெல்லாம் நீங்கள் இன்னொருவருக்குத் தரும் பரிசு.
பழமொழி :
பொது அறிவு :
இந்தியாவின் மிகப்பெரிய காற்றாலை சக்தி எங்கு அமைந்துள்ளது?
விடை : செட்டிக்குளம்
முக்கியச் செய்திகள் : 22.09.2023- வெள்ளி
மாநிலச்செய்தி:
''தமிழக சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், தமிழ் கற்பிக்கும் திட்டம் அறிமுகம் செய்துள்ளதை வரவேற்கிறேன்,'' என சி.பி.எஸ்.இ., மண்டல அதிகாரி தினேஷ்ராவ் பேசினார்.
உள்நாட்டுச் செய்தி :
மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. 171 உறுப்பினர்களின் ஆதரவுடன் மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது. நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க மசோதா வழிவகை செய்கிறது.
உலகச்செய்தி:
அமெரிக்காவில் 2024ம் ஆண்டு இறுதியில் நடக்க உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் குடியரசு கட்சியின் வேட்பாளர் குறித்து, நடந்த கருத்து கணிப்பில், இரண்டாவது இடத்தை இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமியும், முதல் இடத்தை அமெரிக்கா முன்னாள் அதிபர் டிரம்பும் பிடித்துள்ளனர்.
விளையாட்டுச்செய்தி:
தெற்காசிய கால்பந்து லீக் போட்டியில் இந்திய அணி 3-0 என வங்கதேசத்தை வீழ்த்தியது.
School Morning Prayer Activities in English Today
Important News : 22.09.2023 – Friday
State News:
"I welcome the introduction of Tamil teaching program in Tamil CBSE schools," CBSE Zonal Officer Dineshrao said.
National News:
Following the Lok Sabha, the Women's Reservation Bill was also passed in the Rajya Sabha. The Women's Reservation Bill was passed in the Rajya Sabha with the support of 171 members. The Bill provides for 33% reservation for women in Parliament and Assemblies.
World News:
According to the opinion poll about the candidate of the Republican Party who is going to compete in the presidential election to be held at the end of 2024 in the United States, Vivek Ramasamy of Indian origin has taken the second place and the former President of the United States Trump has taken the first place.
Sports News:
India beat Bangladesh 3-0 in the South Asian Football League.