பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் Today 05.09.2023 School Morning Prayer Activities

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் – 05.09.2023

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் Today, School Morning Prayer Activities
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் Today Activities


திருக்குறள்

குறள் 28:

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்ு.

மு.வரதராசன் விளக்கம்:

பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.

பொன்மொழி :

எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை; வரலாறாய் ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை.

பழமொழி :

Man proposes, god disposes.
தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்.

பொது அறிவு :

சிங்கப்பூரின் முந்தைய பெயர் என்ன ?

விடை : டெமாஸெக்

முக்கியச் செய்திகள் : 05.09.2023- செவ்வாய்

மாநிலச்செய்தி:

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 442 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 2.19 லட்சம் இடங்களுக்கு, பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதில், 1.60 லட்சம் இடங்களுக்கு, அரசு ஒதுக்கீட்டில் ஆன்லைன் கவுன்சிலிங்கில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இதில் 54,676 இடங்கள் காலியாக உள்ளன. 

தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 3359 கான்ஸ்டபிள்கள் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

உள்நாட்டுச் செய்தி :

வருங்காலத்தில் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்கும் திட்டத்துக்கு முன்மாதிரியாக விக்ரம் லேண்டரை மீண்டும் மேலே எழுப்பி, அதனை வெற்றிகரமாக தரையிறங்கி இஸ்ரோ சோதனை செய்துள்ளது. 

உலகச்செய்தி:

அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.3,300 கோடி காற்றாலை மின் திட்டத்தை அரசு ஒப்பந்தமாக மாற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.  

விளையாட்டுச்செய்தி:

போர்ச்சுகலை சேர்ந்த பிரபல வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 850வது கோலை விளாசி கால்பந்து விளையாட்டில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார். 

School Morning Prayer Activities in English Today

Important News : 05.09.2023 – Tuesday

State News:

In 442 engineering colleges affiliated to Anna University, admissions are being conducted for 2.19 lakh seats for B.E., B.Tech. Out of this, 1.60 lakh seats were admitted through online counseling under government quota. Out of this 54,676 seats are vacant.

3359 constable vacancies in Tamil Nadu Police has been published. 10th pass candidates can apply.

National  News:

ISRO successfully test-launched the Vikram lander as a prototype for the future mission to land astronauts on the moon.

World News:

The Sri Lankan government has decided to convert the Rs 3,300 crore wind power project awarded to Adani into a government contract.

Sports News:

Cristiano Ronaldo, a famous player from Portugal, scored the 850th goal and set a record in the game of football.

Post a Comment (0)