பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் Today 07.09.2023 School Morning Prayer Activities

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் Today 07.09.2023 School Morning Prayer Activities

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் – 07.09.2023

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் Today, School Morning Prayer Activities
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் Today Activities


திருக்குறள்

குறள் 29:

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

மு.வரதராசன் விளக்கம்:

நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.

பொன்மொழி :

பொருள் இல்லாதவன் ஏழையல்ல. எப்போதும் மனதில் ஆசையைச் சுமந்து திரிபவனே ஏழை.

பழமொழி :

The patient will rule the world
பொறுத்தார் பூமி ஆள்வார்.

பொது அறிவு :

துப்பாக்கியைக் கண்டுபிடித்தவர்?

விடை : பி.வான்மாஸர்

முக்கியச் செய்திகள் : 07.09.2023- வியாழன்

மாநிலச்செய்தி:

சென்னை பல்கலை, கோவை பாரதியார் பல்கலை., கல்வியியல்பல்கலை ஆகிய மூன்று பல்கலைகழகங்களுக்கான துணை வேந்தர் தேடுதல் குழுவில் யு.ஜி.சி.,பிரதிநிதியை நியமனம் செய்து கவர்னர் ரவி அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

உள்நாட்டுச் செய்தி :

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 19-ஆம் தேதியில் இருந்து புதிய கட்டிடத்தில் பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்று பாரளுமன்ற வட்டாரத்தில் இருந்து தகவல் வந்துள்ளது. 

உலகச்செய்தி:

தற்போது பூமியை போன்ற கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஜப்பானின் ஒசாகாவில் உள்ள கிண்டாய் பல்கலைக்கழகத்தின் பாட்ரிக் சோபியா லிகாவ்கா மற்றும் டோக்கியோவில் உள்ள ஜப்பானின் தேசிய வானியல் ஆய்வகத்தின் தகாஷி இடோ ஆகியோரின் சமீபத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. 

விளையாட்டுச்செய்தி:

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் ஜோகோவிச் அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார். காலிறுதியில் அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸை ஜோகோவிச் வீழ்த்தினார். 

School Morning Prayer Activities in English Today

Important News : 07.09.2023 – Thursday

State News:

Governor Ravi has issued an order appointing a UGC representative to the Vice-Chancellor search committee for three universities namely Chennai University, Coimbatore Bharatiyar University and University of Education.

National  News:

Information has come from parliamentary sources that the parliamentary session will be held in the new building from the 19th on the occasion of Vinayagar Chaturthi.

World News:

Scientists have discovered an Earth-like planet. This is according to a recent study by Patrick Sophia Likavka of Kintai University in Osaka, Japan, and Takashi Ito of the National Astronomical Observatory of Japan in Tokyo.

Sports News:

Top seed Djokovic advances to US Open semi-finals Djokovic beats American Taylor Fritz in the quarterfinals knocked down.

Post a Comment (0)