தனியார் பள்ளிகளில் எவ்வித கல்வி மற்றும் இதர கட்டணங்களும் கிடையாது. பொறுப்பான பெற்றோர்களே ! இந்த அரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள் !
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் ( RTE இன் ) மூலமாக 25% இடஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் குழந்தைகளுக்காக அவர்களின் பெற்றோர்கள் எவ்வித கல்வி கட்டணமும் கட்ட்த்தேவை இல்லை. அம்மாணவர்களுக்கான கல்விக்கட்டணங்களை அரசே அப்பள்ளிகளுக்கு செலுத்திவிடும். அம்மாணவர்களிடமிருந்து அவர்கள் படிக்கும் பள்ளிகள் நன்கொடை ஏதும் வசூலிக்கக்கூடாது.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின்
( RTE இன் ) கீழ் ஒவ்வொரு தனியார் பள்ளிகளும்
25% இட ஒதுக்கீட்டை கீழ்க்கண்ட பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும்.
- 1) பட்டியல்
இனத்தவர்
- 2) பட்டியல்
பழங்குடியினர்
- 3) இதர
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
- 4) மாற்றுத்திறனாளிகள்
- 5) பெற்றோர்களை
இழந்த குழந்தைகள்
- 6) தூய்மைப்பணியாளர்களின்
குழந்தைகள்
- 7) எய்ட்ஸ்
( HIV ) பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் குழந்தைகள்
- 8) திருநங்கையர்களின்
வளர்ப்பு குழந்தைகள்
- 9) நலிவடைந்த
பெற்றோர்களின் அல்லது பாதுகாவலர்களின் குழந்தைகள் ( ஆண்டு வருமானம் ரூ.2 இலட்சத்திற்கும்
குறைவாக இருக்கும் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் குழந்தைகள் நலிவடைந்த பிரிவினராக
கருதப்படுவர். )
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் ( RTE இன் ) கீழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :
1) மாணவர்
புகைப்படம் அகலம் 150 px மற்றும் உயரம் 175 px கொண்டதாகவும் , 100 kbஅளவுள்ள jpg வடிவத்திலும்
இருக்க வேண்டும்.
2) மாணவரின்
பிறப்புச்சான்று ( இச்சான்று 1mb அளவுள்ள JPG/JPEG வடிவத்தில் இருக்க வேண்டும் )
3) பெற்றோர்
அடையாளச்சான்றிதழ் ( இச்சான்று 1mb அளவுள்ள JPG/JPEG வடிவத்தில் இருக்க வேண்டும் )
4) முகவரி சான்றிதழ் ( குடும்ப அட்டை (RATION CARD). பான் கார்டு ( PAN CARD ), வங்கிப்புத்தகம் (BANK PASS BOOK), ஓட்டுனர் உரிமம் ( DRIVING LICENCE), கடவுச்சீட்டு (PASSPORT), தொலைபேசி ரசிது (TELEPHONE BILL), வாக்காளர் அடையாள அட்டை (EPIC CARD), கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப்பட்ட இருப்பிட சான்றிதழ் (NATIVE CERTIFICATE), மத்திய / மாநில / பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்ட – இவற்றில் ஏதேனும் ஒன்று.
தேவையான ஆவணங்களை நகல் எடுத்து rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய குறிப்பு :
1) பெற்றோர்கள்
தங்கள் குழந்தைகளுக்காக விண்ணப்பிக்கும்போது தங்கள் இருப்பிடத்திற்கும் , தாங்கள் விண்ணப்பிக்கும்
தனியார் பள்ளிக்கும் 1 கி.மீ தூரத்திற்குள் இருக்க வேண்டும்.
2) குழந்தைகளுக்கான
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் ( RTE இன் ) கீழ் ஒவ்வொரு தனியார் பள்ளிகளிலும்
காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் 2024 ஏப்ரல் 10 ஆம் தேதி ஒவ்வொரு
தனியார் பள்ளிகளின் தகவல் பலகையிலும் , tnemis.tnschools.gov.in என்ற இணையதள முகவரியிலும்
வெளியிடப்படும்.