பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 26 ஜூலை 2023

திருக்குறள் :
குறள் 397:
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
மு.வரதராசன் விளக்கம்:
கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்.
*****
பொன்மொழி :
- ஒரு முள் குத்திய அனுபவம், காடளவு எச்சரிக்கைக்குச் சமம். – லோயஸ்
*****
பழமொழி : (ஆங்கிலம் மற்றும் தமிழில்)
- Better wear out than rust out.
- துருப்பிடிப்பதை விட தேய்ந்து போவது மேல்.
*****
பொது அறிவு :
1) தமிழ்நாட்டின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் (அரசுப் பேருந்து)
வசந்தகுமாரி
2) சதுரங்கத்தில் உலக சாம்பியன் விருது பெற்ற முதல் தமிழர்
விஸ்வநாதன் ஆனந்த்
*****
தமிழில் முக்கியச் செய்திகள் : 26.07.2023 – புதன்கிழமை
மாநிலச்செய்தி:
- நாட்டிலேயே முதல்முறையாக
காணொலி வடிவில் பாடங்களை
அளிக்கும், 'மணற்கேணி' என்ற
செயலி நேற்று தமிழ்நாட்டில் (2023 ஜூலை 25ம்
தேதி) அறிமுகப்படுத்தப்பட்டது.
உள்நாட்டுச்செய்தி:
- புவியின் இறுதி சுற்றுப்பாதையை சந்திரயான் 3 விண்கலம் அடைந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
உலகச்செய்தி:
- சீன வெளியுறவுத்துறை பதவியில் இருந்து கின் காங் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில், வாங் யீ நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் ஏற்கனவே 2013 முதல் 2022 வரை சீன வெளியுறவு அமைச்சராக பணியாற்றி உள்ளார்.
விளையாட்டுச்செய்தி:
- போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்ற இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2வது டெஸ்ட் 'டிரா' ஆனது. மழையால் 5ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.
*****
Important News in English: 26.07.2023 – Wednesday
State News:
- For the first time in the country, an app called 'Manarkeni' was launched in Tamil Nadu (July 25, 2023) to provide lessons in video format.
National News:
- ISRO has announced that the Chandrayaan 3 spacecraft has reached the final orbit of the Earth.
World News:
- Qin Kong has been removed from the Chinese Foreign Ministry post. In his place, Wang Yi is appointed. He has already served as the Chinese Foreign Minister from 2013 to 2022.
Sports News:
- The 2nd Test between India and West Indies at Port of Spain was a 'draw'. Day 5 play was abandoned due to rain.
