பாரதியார் கவிதை

 பாரதியார் கவிதை

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” … என்று உழவின் பெருமையை பாடிய பாரதி மறைந்த தினம் செப்டம்பர்-11.               

இந்த முண்டாசுக்கவியைப் பற்றி சில வரிகள் …

 

அடக்குமுறை கண்டு அஞ்சாத தமிழே !                                                                                   ஆளுமைக்கு உம் மீசையே சாட்சி!                                                                                 

இந்திய விடுதலை இயக்கம் கண்ட இதழாசிரியரே!                                                             ஈகையால் நீ தந்த ஈகையால் தழைத்ததே  தமிழ் …                                                              பாரதிதாசரால், சுரதாவால் … இன்னும்  பலரால்! …                  

உழைக்கும் வர்க்கத்தை உயர்த்த பாடுபட்டதே உம்பாட்டும்!                                              ஊர் செழிக்க வறுமையில் ஆழ்த்தினாய் உம் உறவை!                               

எட்டயபுரத்தில் பிறந்த தேசிய கவியே !                                                                                     ஏகாதிபத்தியம் வேரறுக்க வந்த கூர்வாளே!                                                            

ஐந்தவி (சரஸ்வதி) தந்த தமிழ்த் தலைவனே!                                        

                                                                                                                      

ஒருமைப்பாட்டு வரிகளை விதைத்து அந்நியக் களை எடுத்தாய்!                                  “ஓடி விளையாடு பாப்பா…” என விளையாட்டின் மகத்துவம்                                         போதித்தாய்!

ஔவை வழியில் புது ஆத்திச்சூடி தந்தாய்!  

 


தமிழின் பெருமைதனை தரணி அறியச் செய்தாய்!                             தமிழினத்தை  தலை நிமிரச் செய்தாய்!                                                                   


முண்டாசு கட்டிய முழு மதியே!                                                                                முத்தமிழ் போற்றும் பாவலரே!                                       


பெண்ணடிமைத்தனத்தை வேரோடு அழித்தாய்!                                                        புதுமைப் பெண்ணை பாரறியச் செய்தாய்!                                     


கண்ணனுக்கும், பாப்பாவிற்கும்  ஏன்?  குயிலிற்கும் தனி பாட்டு தந்தாய்!                    கவிஞர் பலருக்கும் எட்டா கற்பனையே!




உம் தமிழால் தமிழையும், நம் தமிழினத்தையும் தரணி ஆளச் செய்தாய்!    தமிழ்க் கவியே ! தேசியக் கவியே !                                                                                 உம் தாள் வணங்கி போற்றுகின்றோம் முத்தமிழால்!



Post a Comment (0)